கொழும்பு : ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 83 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் சேர்த்துள்ளது.ஜிம்பாப்வேயின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்டுவதற்கு இலங்கை அணி இன்னும் 63 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. கைவசம் 3 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளன.இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 90 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் குவித்திருந்தது. 2-ஆவது நாளான சனிக்கிழமை தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே 94.4 ஓவர்களில் 356 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் கிரேக் இர்வின் 160 ரன்கள் குவித்தார். இலங்கை தரப்பில் ரங்கனா ஹெராத் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இலங்கை 293/7: பின்னர் ஆடிய இலங்கை அணியில் கருணாரத்னே-உபுல் தரங்கா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்தது. கருணாரத்னே 25 ரன்களில் வெளியேற, பின்னர் வந்த குஷல் மென்டிஸ் 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.அவரைத் தொடர்ந்து உபுல் தரங்கா 71 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்தவர்களில் கேப்டன் தினேஷ் சன்டிமல் 55, மேத்யூஸ் 41, தில்ருவான் பெரேரா 33 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 83 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் சேர்த்துள்ளது. குணரத்னே 24, ரங்கனா ஹெராத் 5 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.ஜிம்பாப்வே தரப்பில் கிரெமர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் : இலங்கை-293/7
கொழும்பு : ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 83 ஓவர்களில் 7 விக்கெட்
unknown node