தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் இங்கிலாந்து 205-க்கு ஆல்அவுட்

நாட்டிங்காம்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 51.5 ஓவர்களில் 205 ரன்களுக்கு

unknown node

நாட்டிங்காம்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 51.5 ஓவர்களில் 205 ரன்களுக்கு சுருண்டது.நாட்டிங்காமில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 96.2 ஓவர்களில் 335 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் ஆம்லா 78, டி காக் 68, பிலாண்டர் 54 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து முதல் இன்னிங்ûஸ ஆடிய இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் 51.5 ஓவர்களில் 205 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் ஜோ ரூட் 78, பேர்ஸ்டோவ் 45 ரன்கள் எடுத்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் கிறிஸ் மோரீஸ், கேசவ் மகாராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 130 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-ஆவது இன்னிங்ûஸ ஆடிய தென் ஆப்பிரிக்கா 22 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்திருந்தது. டீன் எல்கர் 38, ஆம்லா 23 ரன்களுடன் தொடர்ந்து ஆடி வருகின்றனர்.