அமெரிக்காவில் கொடூர சம்பவம் !கண்மூடித்தனமாக சுட்ட நபரால் 12 பேர் பலி

அமெரிக்காவில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 12  பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் புகழ் பெற்ற கடற்கரை நகரம் ஓன்று உள்ளது.இந்த

அமெரிக்காவில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 12  பேர் உயிரிழந்துள்ளனர்.அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் புகழ் பெற்ற கடற்கரை நகரம் ஓன்று உள்ளது.இந்த நகரத்தில் எப்பொழுதும் மக்கள் கூட்டம் அலைமோதும் .இந்த இடத்தில் கோர சம்பவம் ஓன்று அரங்கேறியுள்ளது. அங்குள்ள விர்ஜீனியா கடற்கரை நகரத்தின் நகராட்சி கட்டிடத்தில் மர்ம நபர் ஒருவர் புகுந்தார்.பின் அங்கு இருந்தவர்களை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார்.இதனால் அங்கு இருந்தவர்கள் அனைவரும் அலறியடித்து ஓடினார்கள்.

unknown node

மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதால் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்த அந்த நபரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.பின் போலீசாரின் விசாரணையில் அந்த நபர் அங்கு பணிபுரிந்த ஊழியர் என்று தகவல் தெரிவித்துள்ளனர்.