TOKYO2020:மல்யுத்தம் போட்டியில் ரவி குமார் இறுதி போட்டிக்கு தகுதி – பதக்கம் உறுதி..!

TOKYO2020: Ravi Kumar qualifies for finals in wrestling - medal guaranteed ..!

ஒலிம்பிக் மல்யுத்தம் ஆண்களுக்கான 57 கிலோ ஃப்ரீஸ்டைல் அரையிறுதியில் இந்தியாவின் ரவி குமார் தஹியா,கஜகஸ்தான் வீரர் நூரிஸ்லாம் சனாயேவை வென்றார்.

இன்று நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் மல்யுத்தம் காலிறுதிப் போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ரவிக்குமார் தஹியா ,பல்கேரியாவின் வாலண்டினோ வாங்கேலோவை  14-4 என்ற கணக்கில்  வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

இந்நிலையில்,அதனைத் தொடர்து நடைபெற்ற 57 கிலோ ஃப்ரீஸ்டைல் அரையிறுதியில் இந்தியாவின் ரவி குமார் தஹியா,கஜகஸ்தான் வீரர் நூரிஸ்லாம் சனாயேவை எதிர்கொண்டார்.

இப்போட்டியின் இறுதியில்,9-2 என்ற கணக்கில் நூரிஸ்லாமை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.இதனால்,குறைந்த பட்சம் வெள்ளிப்பதக்கதை இந்தியாவுக்கு உறுதி செய்துள்ளார்.இறுதிப்போட்டி நாளை நடைபெறவுள்ளது.நாளை இந்தியாவுக்கு பதக்கம் உறுதியாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

unknown node
TOKYO2020:மல்யுத்தம் போட்டியில் ரவி குமார் இறுதி போட்டிக்கு தகுதி – பதக்கம் உறுதி..!