டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற மகளிர் ஹாக்கி போட்டியில்,இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய இந்திய அணியினர் போட்டியின் இறுதியில்,ஆஸ்திரேலியாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.இதன்மூலம்,ஒலிம்பிக் வரலாற்றில் முதல்முறையாக மகளிர் அணி அரையிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.
unknown nodeஅதேபோல நேற்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி பிரிட்டன் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் இந்திய ஆடவர் வீழ்த்தியது. 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.