ஸ்விஸ் ஓபன்: தோல்வியை சந்தித்த பி.வி.சிந்து.. 9 ஆம் முறை வெற்றிபெற்ற கரோலினா!

PV Sindhu from Team India lost in the women's singles final of the Swiss Open Badminton Series, which held in Switzerland.

ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்ற ஸ்விஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவிற்கான இறுதிப்போட்டியில் இந்திய அணியின் வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியை சந்தித்தார்.

சஸ்விஸ் ஓபன் பேட்மிட்டன் தொடருக்கான இறுதிப்போட்டி, நேற்று நடைபெற்றது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவிற்கான போட்டியில் இந்திய அணியின் அதிரடி வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் ஸ்பெயின் நாட்டின் வீராங்கனை கரோலினா மரினும் மோதினார்கள். இருவருக்கும் இடையிலான இந்த போட்டி, 35 நிமிடங்களிலே முடிந்தது.

ஸ்பெயின் நாட்டின் கரோலினா மரினும், சிந்துவும் மோதிய இந்த இறுதி போட்டியில் கரோலினா 21-12, 21-5 என நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றுள்ளார். மேலும், சர்வதேச போட்டிகளில் பி.வி.சிந்து மற்றும் கரோலினா ஆகிய இருவரும் நேருக்கு நேர் மோதியதில், கரோலினா 9 முறை வெற்றி பெற்றுள்ளது, குறிப்பிடத்தக்கது.

ஸ்விஸ் ஓபன்: தோல்வியை சந்தித்த பி.வி.சிந்து.. 9 ஆம் முறை வெற்றிபெற்ற கரோலினா!