நீட் விலக்கு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க கோரி சு.வெங்கடேசன் எம்பி எழுதிய கடிதத்துக்கு குடியரசு தலைவர் பதில்.
நீட் விலக்கு மசோதா தொடர்பாக சு.வெங்கடேசன் எம்பி அனுப்பிய கடிதத்துக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதிலளித்துள்ளார். அதாவது, நீட் விலக்கு மசோதா உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக சு.வெங்கடேசன் எம்பி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க கோரி சு.வெங்கடேசன் எம்பி எழுதிய கடிதத்துக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதிலளித்துள்ளார். அனிதாக்களுக்கான மருத்துவ கல்வியை பறிக்கும் நீட் விலக்கு மசோதாவுக்கு உடனே ஒப்புதல் தர வேண்டும்.
மருத்துவ அரங்கும், மருத்துவக்கல்வியும் அனித்தாக்களுக்கானது. அதை பறிப்பதை தடுக்கும் நீட் ஒழிப்பு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.தமிழகத்தின் கனவு அனித்தாக்களின் கல்வி உரிமையை நிலைநாட்டுவதே என சு.வெங்கடேசன் எம்பி திரௌபதி முர்முக்கு கடிதம் எழுதியுள்ளார்.
unknown node