INDvsSL: இந்திய பந்து வீச்சில் 9 விக்கெட்டை இழந்து திணறிய இலங்கை.!

இன்று இலங்கை - இந்தியா இடையிலான 2-வது டி20 போட்டி மத்தியபிரதேசம் மாநிலத்தில் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற

இன்று இலங்கை – இந்தியா இடையிலான 2-வது டி20 போட்டி நடைபெற்று வருகிறது.

முதலில் இறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 142 ரன்கள் எடுத்தனர்.

இன்று இலங்கை – இந்தியா இடையிலான 2-வது டி20 போட்டி மத்தியபிரதேசம் மாநிலத்தில் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச முடிவு செய்தார்.

இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக டேனிஷ்கா, அவிஷ்கா இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாக விளையாடிய அவிஷ்கா 5 பவுண்டரி விளாசி 22 ரன்களுடன் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் குஷால் பெரேரா இறங்கினார்.

அடுத்த சில நிமிடங்களில் டேனிஷ்கா 20 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.இதையெடுத்து அதிரடியாக விளையாடிய 3 சிக்ஸர்கள் விளாசினார். அரைத்சதம் அடிப்பார் என எதிர்பாராத நிலையில்  34 ரன்னில் விக்கெட்டை இழந்து வெளியேறினர்.

பின்னர் இறங்கிய அனைத்து வீரர்களும் நிலைத்து நிற்கவில்லை இதனால் இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 142 ரன்கள் எடுத்தனர்.இந்திய அணி சார்பில் சர்துல் தாக்கூர் 3 விக்கெட்டும் , நவதீப் சைனி ,குலதீப் யாதவ் இருவரும் தலா இரண்டு விக்கெட்டை வீழ்த்தினர்.143 ரன்கள் இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.

INDvsSL: இந்திய பந்து வீச்சில் 9 விக்கெட்டை இழந்து திணறிய இலங்கை.!