அடி தூள்...! 4 நாளில் ரூ.50 கோடி வசூலைக் குவித்த சிவகார்த்திகேயனின் மாவீரன்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியான ‘மாவீரன்’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது வருகிறது. இப்படம் உலகம் முழுவதும்

Maaveeran

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியான ‘மாவீரன்’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது வருகிறது. இப்படம் உலகம் முழுவதும் ரூ.50 கோடி வசூல் செய்துள்ளதாக மாவீரன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.படம் வெளியான நாளில் இருந்தே, பாசிடிவ் விமர்சனங்களுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

unknown node

Maaveeran Box Office collection [Image source :@ShanthiTalkies]

தமிழ்நாடு ரூ.30 கோடி, கர்நாடகாவில் ரூ.2.75 கோடி, ஆந்திராவில் ரூ.2.80 கோடி, கேரளாவில் ரூ.0.85 கோடி, மற்ற பகுதிகள்: ₹0.60 கோடி, வெளிநாடு ரூ.11.40 கோடி என வெறும் 4 நாட்களில் உலகளாவில் ரூ.50 கோடிக்கும் மேல் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.

unknown node

உலகளவில் முதல் நாளில் 11 கோடி, இரண்டாம் நாள் 28 கோடியும், மூன்றாம் நாளில் 45 கோடியும் நான்காம் நாளில் -50 கோடி என வசூலில் சக்கை போடு போட்டுள்ளது. இந்த ஆண்டு தமிழ்நாட்டின் நான்காவது பெரிய ஓப்பனிங்கை ‘மாவீரன்’ பெற்றுள்ளதாக வர்த்தக கணிப்பில் தெரிய வந்துள்ளது. அதாவது, துணிவு, வாரிசு, பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மாவீரனுக்கு நல்ல வசூல் கிடைத்துள்ளதாம்.

unknown node

Maaveeran [file image]

மாவீரன்:

மடோன் அஸ்வின் இயக்கிய ‘மாவீரன்’ படத்தின் கதையை மடோன் அஷ்வின் மற்றும் சந்திரா இணைந்து எழுதியுள்ளனர். இப்படத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் மற்றும் மிஷ்கின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யோகி பாபு, சுனில், சரிதா மற்றும் மோனிஷா பிளெஸ்ஸி ஆகியோர் துணை நடிகர்களாக உள்ளனர்.