Shot Boot Three: குட்டி பசங்களுடன் 'ஷாட் பூட் த்ரீ' போடும் வெங்கட் பிரபு – சினேகா! அட்டகாசமான டிரெய்லர்!

இயக்குனர் அருணாச்சலம் வைத்தியநாதன் எழுதி இயக்கியிருக்கு 'ஷாட் பூட் த்ரீ' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரங்களாக கைலாஷ் ஹீட், ப்ரணிதி பிரவீன் மற்றும் பூவையார்

Shot Boot Three

இயக்குனர் அருணாச்சலம் வைத்தியநாதன் எழுதி இயக்கியிருக்கு ‘ஷாட் பூட் த்ரீ’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரங்களாக கைலாஷ் ஹீட், ப்ரணிதி பிரவீன் மற்றும் பூவையார் ஆகியோர நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு, சினேகா, யோகி பாபு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

தற்போது, ஷாட் பூட் த்ரீ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டனர். இந்த டிரெய்லரை வைத்து பார்க்கையில், உடன்பிறந்த சகோதரனுக்கு பதிலாக நாயை தத்தெடுக்கும் காட்சிகளை வைத்து கதை நகர்கிறது.

பின்னர், அந்த நாய் கடத்தப்பட்டபோது, நண்பர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அதைக் கண்டுபிடிக்கிறார்கள்ம். இறுதியில், அந்த நாயை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பது தான் படத்தின் கதை. குறிப்பாக, படத்தில் வெங்கட் பிரபுவுக்கு மனைவியாக சினேகா நடித்திருக்கிறார். இடையில், யோகி பாபு என்ட்ரி கொடுத்திருக்கும் காட்சிகளும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

unknown node

மேலும், இந்த படத்திற்கு ராஜேஷ் வைத்யா இசையமைத்துள்ளார். இயக்குனர் அருணாச்சலம் இந்த படத்தை இயக்குவது மட்டுமின்றி, தனது ஹோம் பேனரான யுனிவர்ஸ் கிரியேஷன்ஸின் கீழ் படத்தைத் தயாரித்துள்ளார். இப்படம் அக்டோபர் 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.