ஊரடங்கு உத்தரவால் சிரமப்படும் மக்கள் ! ரூ.1.25 கோடி நிதி திரட்டிய சானியா மிர்சா
ஊரடங்கு உத்தரவால் சிரமப்படும் மக்களுக்கு ரூ.1.25 கோடி நிதி திரட்டியுள்ளார் சானியா மிர்சா.
கொரோனா வைரஸ் இந்தியாவில் தற்போது அதிவேகமாக பரவி வருகிறது.இந்த வைரசால் இந்தியாவில் இதுவரை 1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.இதனால் பல்வேறு தொழில் முடங்கியுள்ளது.
எனவே பிரதமர் மோடி கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் இயன்ற நிதியுதவி அளியுங்கள் என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.வேண்டுகோளை ஏற்று பலரும் நிதி உதவி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஊரடங்கு காரணமாகப் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உதவும் வகையில் கடந்த ஒருவாரமாக ரூ.1.25 கோடி நிதி திரட்டியுள்ளார்.இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு இதுவரை உணவு வழங்கியுள்ளோம் என்றும் இந்தத் தொகை 100000 பேருக்கு உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.