நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்று தர வேண்டும் என மத்திய அமைச்சரிடம் கோரிக்கை.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் வைக்கப்பட்ட கோரிக்கை குறித்து விளக்கமளித்தார். அதாவது அமைச்சர் கூறுகையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து நிறுவ வேண்டும். நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்று தர வேண்டும் எனவும் மத்திய அமைச்சரிடம் நேரில் சென்று வலியுறுத்தியதாக கூறினார்.
மேலும், உக்ரைனில் படித்த மாணவர்கள், இந்தியாவில் படிப்பை தொடர வழிவகை செய்ய வேண்டும். அகில இந்திய ஒதுக்கீடு செய்து, நிரப்பப்படாமல் உள்ள மருத்துவ இடங்களை தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 30 அரசு மருத்துவ கல்லூரிகளில் புதிய அரசு செவிலியர் கல்லுரி நிறுவ வேண்டும் எனவும் கொரோனா தடுப்பூசி கூடுதலாக வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.