பிக் பாஸ் 6 வது சீசன் நிகழ்ச்சி தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தற்போது 3-வது நாளுக்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ப்ரோமோவில் “பிக் பாஸ்” வீட்டிற்குள் இங்கே இருக்கும் போட்டியாளர்களுடன் பழகிய ஒரு சில நாட்களுக்குள் யாருடன் நட்பை தொடர விரும்புகிறீர்கள். யாரிடம் இருந்து விலகி இருக்க நினைகிறீர்கள்..? என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது.இதில் ஹவுஸ் மேட்ஸ் ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்துக்களை கூறுகிறார்கள்.
unknown nodeஅப்போது ஜனனி ஆயிஷாவிடம் இருந்துநான் விலகி இருக்க வேண்டும் என்றும் நினைக்கிறேன். எதற்காகவென்றால், அவருக்கும் எனக்கும் சண்டை வரலாம் என்று தோன்றுகிறது… என்று ஜெனனி பேசிக் கொண்டிருக்கும்போதே ஆயிஷா சற்று கோபப்பட்டு நான் அப்படி உன்னை நினைக்கவில்லை என்று கூறுகிறார்.
இதையும் படியுங்களேன்-மணிரத்தனம் படத்துல நடிச்சுதான் பேர் வாங்கணும்னு அவசியமில்ல… மனோ பாலா அதிரடி பேச்சு.!
unknown nodeBiggBossTamil Day3 Promo1 Image Source: youtube
இதனால் கடுப்பான ஜனனி நான் பேசுவது உங்களுக்கு பிடிக்கவில்லையா..? என கேட்க.. ஆயிஷா “நான் எல்லோர்கிட்டயும் ஒன்னு சொல்லுறேன்.. நான் பேசும் ஸ்டைல் தப்பா இருக்கும் என்று நான் ஃபீல் பண்றேன் என்று கவலையுடன் கூறுகிறார். பிறகு விஜே மகேஸ்வரி உன் ஸ்டைல் எங்களுக்கு தப்பா தெரியல என்று கூறுகிறார்.
unknown nodeBiggBossTamil Day3 Promo1 Image Source: youtube
பிறகு பேசிய ஆயிஷா ” இல்லை நான் என்னோட கடமைக்கு எல்லோர் கிட்டயும் சொல்லுகிறேன்… என கண்ணீருடன் பேசுகிறார். மேலும், விஜே மகேஸ்வரி சரி ஓகே இதை விடு என்று கூறுகிறார். அப்போது ஓகே நான் எதுவும் பேசல என்னை விட்ருங்க சாரி… என்று ஆயிஷா கத்துகிறார். இந்த ப்ரோமோவை பார்த்த பலரும் ஆயிஷாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.