இத்தாலி ஓபன் டென்னிஸ் : 10வது முறையாக ரஃபேல் நடால் சாம்பியன்..!!

Rafael Nadal of Spain defeats world number one Novak Djokovic of Serbia at the Italian Open tennis final

இத்தாலி ஓப்பன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ஸ்பெயினைச் சேர்ந்த ரபேல் நடால் உலக தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சை வென்று சாம்பியன் பட்டம் வென்றார்

இத்தாலியில் உள்ள ரோம் நகரில் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடைபெற்று வந்தது. இந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீரர்  ஜோகோவிச் மற்றும்  மூன்றாம் நிலை வீரரான ரஃபேல்நடாலும் மோதினர்.

இந்த இறுதி போட்டியில் 3 செட் நடைபெற்றது. இதில் முதல் செட்டை ரஃபேல் நடால் 7-5 என்ற கணக்கில் கைப்பற்றினார். அடுத்ததாக இரண்டாவது செட்டை 6-1 என கைப்பற்றினர். அடுத்ததாக கடைசி செட்டில் அதிரடியாக விளையாடி ரஃபேல் நடால் 6-3 என்ற கணக்கில் வென்றார். இதன் மூலம் 10வது முறையாக ரஃபேல் நடால் சாம்பியன் பட்டத்தை வென்றார்.