ISL 2020-21: முதல் வெற்றியை பதிவு செய்த நார்த் ஈஸ்ட் யுனைடெட்!

North East United recorded their first win against mumbai city in ISL match 3 1-0 goal. fans not allowed to visit this matches.

ஐஎஸ்எல் தொடரின் இரண்டாம் போட்டியில் 1-0 என்ற கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி, தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்தியாவில் ஐபிஎல் தொடருக்கு அடுத்தபடியாக பெரிதாக நடப்பது, ஐஎஸ்எல் கால்பந்து தொடர். 2020 – 2021 ஆம் ஆண்டு நடைபெறும் ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர், கோவா மாநிலத்தில் நடைபெறுகிறது. கொரோனா பரவல் காரணமாக இந்த தொடர், ரசிகர்களின்றி நடைபெறுகிறது. அதன்படி நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை சிட்டி – நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதியது.

இந்த போட்டி, வாஸ்கோவில் உள்ள திலக் மைதானத்தில் நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் பாதியில் இரு அணியினரும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. அதனைதொடர்ந்து நடந்த இரண்டாம் பாதியின் 49 ஆம் நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியின் வீரர் குவேஸி அப்பியா, முதல் கோலை பதிவு செய்தார். அதனைதொடர்ந்து விறுவிறுப்பாக நடந்த போட்டி, இறுதியை எட்டியது. மும்பை சிட்டி அணி ஒரு கோல் கூட அடிக்காத நிலையில், 1-0 என்ற கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.