தென் ஆப்ரிக்காவில் 19 வயது உட்பட்டவர்களுக்கான உலக கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இன்று செமி-பைனல் போட்டியில் இந்திய அணி ,பாகிஸ்தான் அணியுடன் மோதி வருகிறது.
முதலில் இறங்கிய பாகிஸ்தான் அணி 43.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 172 ரன்கள் மட்டுமே அடித்தனர்.
தென் ஆப்ரிக்காவில் 19 வயது உட்பட்டவர்களுக்கான உலக கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இன்று செமி-பைனல் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் மோதி வருகிறது.
இப்போட்டி போட்செஃப்ஸ்ட்ரூமில் உள்ள சென்வெஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.அதன் படி முதலில் தொடக்க வீரர்களாக ஹைதர் அலி , முஹம்மது ஹுரைரா இருவரும் இறங்கினர்.
ஆனால் ஆட்டம் தொடக்கத்திலே முஹம்மது ஹுரைரா 4 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் இறங்கிய ஃபஹத் முனீர் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.இதையெடுத்து இறங்கிய ரோஹைல் நசீர் , ஹைதர் அலி இருவரும் கூட்டணியில் அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.
நிதானமாக விளையாடிய ஹைதர் அலி அரைசதம் அடித்து 56 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.மத்தியில் இறங்கிய முகமது ஹரிஸ் 21ரன்கள் அடிக்க கடைசிவரை அதிரடியாக விலையாடிய ரோஹைல் நசீர் 62 ரன்கள் அடிக்க பாகிஸ்தான் அணி 43.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 172 ரன்கள் மட்டுமே அடித்தனர்.
இந்திய அணியில் சுஷாந்த் மிஸ்ரா 3 விக்கெட்டும் , கார்த்திக் , ரவி பிஷ்னோய் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.173 ரன்கள் இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.