உலக இளையோர் தடகள சாம்பியன்ஷிப்;வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை ஷைலி சிங்..!

Indian athlete Shailee Singh won the silver medal in the long jump event at the World Youth Athletics Championships

உலக இளையோர் தடகள சாம்பியன்ஷிப்பில் நீளம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ஷைலி சிங் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் கடந்த சில நாட்களாக  உலக இளையோர் U20 தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.அதன்படி,முன்னதாக நடைபெற்ற தடகள போட்டியில் பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் ஷைலி சிங் முதலில் 6.34 மீட்டரையும், 2வதாக 5.98 மீட்டரையும் தாண்டி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார்.

இந்நிலையில்,நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் 17 வயதான ஷைலி சிங், 6.59 மீ நீளம் தாண்டி வெள்ளிப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.இவருடன் போட்டியில் பங்கேற்ற  ஐரோப்பிய ஜூனியர் சாம்பியன் மஜா அஸ்காக் 6.60 மீட்டர் நீளம் தாண்டி தங்கபதக்கம் வென்றார்.எனினும்,ஷைலி சிங்கின் தங்கப் பதக்க வாய்ப்பு 1 சென்டிமீட்டர் வித்தியாசத்தில் நழுவியது என்பது குறிப்பிடதக்கது.