உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியா!

The Indian team won the silver medal in the men's 10m air rifle category at the ISSF World Cup Sniper Championships in Delhi.

டெல்லியில் நடைபெற்று வரும் ஐ.எஸ்.எஸ்.எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றது, இந்திய அணி.

ஐ.எஸ்.எஸ்.எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி, டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், தீபக் குமார் மற்றும் பங்கஜ் குமார் ஆகியோர் அடங்கிய இந்திய அணி, 16-14 என்ற கணக்கில் இறுதிப் போட்டியில் வென்றது.

லூகாஸ் கோசெனீஸ்கி, வில்லியம் ஷானர் மற்றும் திமோதி ஷெர்ரி ஆகியோர் அடங்கிய அமெரிக்கா அணி, ஒரு கட்டத்தில் 10-14 என்ற கணக்கில் வீழ்ச்சியடைந்தது. ஆனால் கடைசி மூன்று சுற்றுகளில் வென்று, தங்கப்பதக்கத்தை தட்டி சென்றது. இதனால் இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.