டெல்லியில் திங்கள்கிழமை காலை இந்தியா கூட்டணி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் என முடிவு செய்துள்ளனர்.
மணிப்பூர் வீடியோ விவகாரத்தில், பிரதமர் நரேந்திரமோடி நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்க வலியுறுத்தி INDIA கூட்டணி எம்பிக்கள் வரும் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் ஆர்ப்பாட்டம் நடத்த இந்தியா கூட்டணி எம்பிக்கள் முடிவு செய்துள்ளனர். மணிப்பூர் விவகாரத்தில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் விளக்கமளிக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அதன்படி, காலை 10:30 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்திலுள்ள, காந்தி சிலை முன் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
