"நான் 2021 ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கவில்லை"- ரோஜர் பெடரர்!

Tennis star Roger Federer has ruled himself out of the 2021 Australian Open tennis series due to knee operation.

காயம் முழுவதுமாக குணமடையாத காரணமாக, 2021 ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கவில்லை என டென்னிஸ் நட்சத்திர வீரரான ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார்.

ஸ்விட்சர்லாந்து நாட்டை சேர்ந்த டென்னிஸ் நட்சத்திர வீரரான ரோஜர் பெடரர், ஆஸ்திரேலியா ஓபன் ஒற்றையர் பிரிவில் இவர், 6 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். தற்பொழுது இவருக்கு முழங்கால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்பொழுது அவர் 90 சதவீதம் வரை குணமடைந்து விட்டதாகவும், தினமும் 2 மணி நேரம் முழுமையாக டென்னிஸ் பயிற்சியில் ஈடுபடுவதாக கூறிய கூறினார்.

மேலும், 2021 ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாமில் ஆடவுள்ளதாக கடந்த வாரம் பெடரர் தெரிவித்திருந்தார். ஆனால் அவருக்கு காயம் முழுவதுமாக குணமடையாத காரணமாக அவர் 2021 ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கவில்லை என அறிவித்துள்ளார்.