அசாம் டிஎஸ்பியாக தடகள வீராங்கனை ஹிமா தாஸ் நியமனம்..!

The Assam government yesterday appointed Hima Das, an Indian athlete, as the state's deputy superintendent of police.

அசாம் அரசு நேற்று இந்திய தடகள வீராங்கனை ஹிமா தாஸை மாநில துணை போலீஸ் சூப்பிரண்டாக நியமித்தது. அசாம் முதல்வர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

21 வயதான ஹிமா தாஸ் தற்போது டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் தகுதிச்சுற்றுக்காக பாட்டியாலாவின் நேதாஜி சுபாஷ் தேசிய விளையாட்டு மையத்தில் பயிற்சி பெற்று வருகிறார். இந்திய தடகள வீராங்கனை ஹிமா தாஸ் உலகளவில் நடைபெற்ற தடகள போட்டிகளில் 5 தங்க பதக்கங்களை வென்றுள்ளார்.

மாநில அரசின் இந்த முடிவுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பாராட்டு தெரிவித்துள்ளார். ஹிமா தாஸ் நாட்டிற்காக பந்தயங்களில் பங்கேற்பார் என தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் பல்வேறு மாநிலத் துறைகளில் அதிகாரிகளாக நியமிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அசாம் டிஎஸ்பியாக தடகள வீராங்கனை ஹிமா தாஸ் நியமனம்..!