முன்னாள் டபிள்யுடபிள்யுஇ மல்யுத்த வீரர் லூக் ஹார்ப்பர்(41) நுரையீரல் பிரச்சினை காரணமாக உயிரிழந்தார். ஹார்ப்பரின் உண்மையான பெயர் ஜான் ஹூபர். இவரை ஆல் எலைட் மல்யுத்தத்தில் பிராடி லீ என்று அழைக்கப்பட்டார்.
லூக் ஹார்ப்பர் உயிரிழப்பு குறித்த செய்தியை இன்ஸ்டாகிராமில் அவரது மனைவி அமண்டா வெளியிட்டார். அதில், நுரையீரல் பிரச்சினையால் இறந்துவிட்டதாகக் கூறினார். “எனது சிறந்த நண்பர் இன்று இறந்துவிட்டார், நான் ஒருபோதும் அந்த வார்த்தைகளை எழுத விரும்பவில்லை.
unknown nodeஎன் இதயம் உடைந்துவிட்டது. அவர் எனது சிறந்த நண்பர், கணவர் மற்றும் மிகப் பெரிய தந்தை, நான் உணரும் அன்பை அல்லது நான் இப்போது எவ்வளவு உடைந்துவிட்டேன் என்பதை எந்த வார்த்தைகளாலும் வெளிப்படுத்த முடியாது, என்று அவர் தெரிவித்துள்ளார்.