ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 18 ஆம் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற ஜோக்கோவிச்!

Djokovic won in the final of the Australian Open tennis series 7-5 6-2 6-2 to win his ninth Australian Open title and 18th Grand Slam title.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி போட்டியில் 7-5 6-2 6-2 என்ற நேர் செட்களில் ஜோக்கோவிச் வெற்றிபெற்று, தனது 9வது ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர், பெல்பர்ன் நகரில் நடைபெற்றது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான அரை இறுதி போட்டி, கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது. இதில் ரஷ்யாவை சேர்ந்த டானில் மெத்வெடேவ் மற்றும் கிரீஸ் கிரீஸை சேர்ந்த ஸ்டெபனோஸ் ஸிட்சிபாஸ் ஆகியோர் மோதினார்கள். இந்த போட்டியில் மெத்வெடேவ் வெற்றிப்பெற்று, இறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்றார்.

இதனையடுத்து இன்று நடைபெற்ற டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் சேர்பியாவைச் சேர்ந்த நொவாக் ஜோக்கோவிச், ரஷ்யாவின் டனில் மெட்வெடேவ் மோதினார்கள். மிக விறுவிறுப்பாக சென்றுகொண்டிருந்த இந்த இறுதி போட்டியில் 7-5 6-2 6-2 என்ற நேர் செட்களில் ஜோக்கோவிச் வெற்றிபெற்று, தனது 9வது ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.இது அவரது 18வது கிராண்ட்ஸ்லாம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.