1250 அடி உயரத்தில் இருந்து குதிக்கும் தோனி..வைரலாகும் பழைய வீடியோ..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், தோனி அவர்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார். இந்த செய்தி, ஒட்டுமொத்த ரசிகர்களை

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், தோனி அவர்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார். இந்த செய்தி, ஒட்டுமொத்த ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. தோனி ஓய்வு குறித்து கிரிக்கெட் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், என பலரும் வாழ்த்துக்கள், மற்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், ரசிகர்கள் பிசிசியைக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளனர். அதில், தோனி அவர்கள் அணிந்த  அவரது 7 ஆம் எண் கொண்ட ஜெர்சியை வேறு ஒருவர் அணி கூடாது. எனவே தோனியின்  7 ஆம் எண் கொண்ட ஜெர்சிக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தோனியின் ஓய்வு பெற்றதால் அவருடன் நட்புகளில் இருந்தவர்கள் பழைய சம்பவங்கள் குறித்து பகிர்ந்து வருகின்றனர்.இந்நிலையில், தோனி லெப்டினன்ட் கர்னல் என்பதால்ஆக்ராவில் உள்ள பாராட்ரூப்பர்ஸ் பயிற்சி பள்ளியில் விமானப்படை  குழுவுடன் பயிற்சி பெற்றார். அப்போது, அவர் 1250 அடி உயரத்தில் இருந்து ஒரு பாராசூட் உதவியுடன் ஏ.என் -32 விமானத்திலிருந்து  குதிக்கும் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தோனி தரை இறங்க 70 வினாடிகள் ஆனது. இந்த வீடியோ பழைய வீடியோ, ஆனாலும் தற்போது அந்த வீடியோ இணையத்தில்  காட்டு தீ போல பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node