தமிழில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 7ஆவது சீசன் நிகழ்ச்சியில் பரபரப்புக்கு பஞ்சமில்லை. இந்த வாரம் ‘பிபி டான்சிங் மராத்தான்’ என்ற தலைப்பில் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதில் பூர்ணிமா விதிகளை மீறியதால் பூர்ணிமாவிற்கும் மாயாவிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் வெடித்தது.
படங்களில் நடிக்க வாய்ப்பு வராமல் இருந்த காரணத்தால் இன்னுமே கூல் சுரேஷ் சோகத்தில் இருந்த நிலையில், இறுதியாக அவருக்கு ஜாக்பாட் அடிக்கும் வகையில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விளையாடி வருகிறார்.
கடந்து வந்த பாதை டாஸ்க் : ‘காலையில் பேப்பர் போட போவேன்’…கதறி அழும் கூல் சுரேஷ்!
இந்த நிலையில், கூல் சுரேஷ், மன அழுத்தம் காரணமாக அந்த வீட்டிலிருந்து தப்ப முயற்சித்த சம்பவம் சக போட்டியாளர்களை பீதியை கிளப்பியது. இதையடுத்து உடனடியாக கூல் சுரேஷை தொடர்புகொண்ட பிக் பாஸ், அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டதுடன் ஏதாவது பிரச்னை இருந்தால் தன்னை அழைக்குமாறு அறிவுரை செய்து கடுமையாக எச்சரித்தார்.
unknown node