#BREAKING: இந்த மாநிலத்தில் முகக்கவசம் அணியவிட்டால் ரூ. 5,000 அல்லது 6 மாதம் சிறை.!
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து மத்திய அரசு பொதுஇடங்களில் முகக்கவசம், சமூகஇடைவெளி ஆகியவற்றை கடைபிடிக்கவேண்டும் என அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தில் பொதுமக்கள் பொது இடங்களில் முகக்கவசம், சமூகஇடைவெளியை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறினால் ரூ. 5,000 அபராதம் அல்லது 6 மாதம் சிறை தண்டனை என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
உத்தரகண்டில் இதுவரை 1785 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 1077 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும், 685 பேர் தற்போது மருத்துவமனைகளில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.