ஆஸ்திரேலிய ஓபன்: இறுதிப்போட்டிக்கு நுழைந்த டானில் மெத்வெடேவ்!

Russia's Danil Medvedev enters the singles final of the Australian Open Grand Slam tennis. He is going to play against Novak Djokovic in the final.

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ரஷ்யாவை சேர்ந்த டானில் மெத்வெடேவ், இறுதிப்போட்டிக்கு நுழைந்தார்.

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர், பெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான அரை இறுதிப் போட்டி, இன்று நடைபெற்றது. இதில் ரஷ்யாவை சேர்ந்த டானில் மெத்வெடேவ் மற்றும் கிரீஸ் கிரீஸை சேர்ந்த ஸ்டெபனோஸ் ஸிட்சிபாஸ் ஆகியோர் மோதினார்கள்.

இந்த போட்டி, மிக விறுவிறுப்பாக சென்றுகொண்டிருந்த நிலையில், 6-4, 6-2, 7-5 என்ற நேர் செட் கணக்கில் மெத்வெடேவ் வெற்றிப்பெற்று, இறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்றார். இதனையடுத்து நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் நோவாக் ஜோகோவிச் மற்றும் டேனியல் மெத்வெடேவ் ஆகியோர் மோதவுள்ளனர்.