டோக்கியோ ஒலிம்பிக்;கோல்ப் போட்டியில் அதிதி அசோக் அதிர்ச்சி தோல்வி..!

Aditi Ashok loses golf tournament at Tokyo Olympics

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் கோல்ப் போட்டியில் இந்தியாவின் அதிதி அசோக் தோல்வியுற்றுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் கோல்ப் போட்டியின் நான்காவது சுற்று (இறுதிப் போட்டி) இன்று நடைபெற்றது.ஆனால்,மழைக் காரணமாக போட்டி சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டு மீண்டும் நடைபெற்றது.

இப்போட்டியில்,இந்தியாவின் அதிதி அசோக் கலந்து கொண்டு விளையாடினார்.முன்னதாக நடைபெற்ற போட்டிகளில் அதிதி 3 வது இடத்தில் இருந்ததால்,கண்டிப்பாக அவர் ஏதேனும் பதக்கத்தை பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில்,இப்போட்டியின் இறுதியில் அதிதி 4 வது இடத்தை பிடித்து தோல்வியுற்றுள்ளார்.இதனால்,பதக்க வாய்ப்பை இழந்தார்.முதல் இடத்தில் அமெரிக்க வீராங்கனை நெல்லி முதலிடத்தில் உள்ளார்.

unknown node