மக்களே கவனம்.! தமிழ்நாட்டில் இன்று 14 இடங்களில் சதமடித்த வெயில்.!

தமிழ்நாட்டில் 14 இடங்களில் இன்று வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்துள்ளது.

தமிழ்நாட்டில் 14 இடங்களில் இன்று வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்துள்ளது.

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இன்றும் நாளையும் தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து  2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

இன்று அதிக பட்சமாக, கரூர் பரமத்தியில் 105.44 டிகிரி பாரன்ஹீட்டை தொட்ட வெயில், மாநிலத்தின் 14 இடங்களில் வெப்பநிலை சதம் அடித்துள்ளது.

அதில், ஈரோட்டில் இன்று 105.8 F

சென்னை – 101.66 F

வேலூர் – 104.54 F

சேலம் – 103.46 F

தஞ்சாவூர் – 100.4 F

மதுரை – 102.56 F

நாமக்கல் – 101.3 F

தருமபுரி – 100.76

பாளையங்கோட்டை – 101.3 F

திருத்தணி – 103.1 F

கோவை – 100.4 F

திருச்சிராப்பள்ளி – 102.38

திருப்பத்தூர் – 102.92 F என இன்றய வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இதனால் முதியோர், கர்ப்பிணிகள், குழந்தைகள் நண்பகல் 12 முதல் மதியம் 3 மணி வரை வெளியே வர வேண்டாம். இளநீர், மோர், தண்ணீர் போன்றவற்றை அடிக்கடி குடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழைக்கு வாய்ப்பு:

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது