வாட்ஸ்அப் நிறுவனம், விரைவில் புகைப்படங்களை அசல் தரத்துடன் பயனர்கள் அனுப்ப அனுமதிக்கிறது.
உலகின் பல மில்லியன் பயனர்கள் பயன்படுத்தும், செய்திகளை பகிரும் மெட்டாவின் வாட்ஸ்அப், செயலியானது பயனர்கள் அனுப்பும் புகைப்படங்களை அசல் தரத்துடன் அனுப்புவதற்கு விரைவில் அனுமதிக்கவிருக்கிறது. அதற்கான புதிய அம்சத்திற்கான செயல்பாடுகளில் வாட்ஸ்அப் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது.
வாட்ஸ்அப்பில் இதுவரை நாம் அனுப்பும் புகைப்படங்கள், ஒரிஜினல்(அசல்) தரத்தில் இல்லாமல், அதன் அசல் தரம் குறைந்த அளவிலான புகைப்படம் மட்டுமே அனுப்பப்படுவது நடைமுறையில் இருக்கிறது. வெகுநாட்களாக பயனர்களின் குறையாக பார்க்கப்பட்டு வந்த, இந்த நிலைமையை வாட்ஸ்அப், தனது புதிய அப்டேட்டில் சரிசெய்யவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாட்ஸ்அப் கொண்டுவரும் இந்த புதிய அம்சத்தில், ஒரு புதிய அமைப்பு(Setting) ஐகானை அறிமுகப்படுத்த இருக்கிறது, இதன்மூலம் புகைப்படத்தின் தரத்தை நாம் தேர்வு செய்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.