இந்தியாவில் புதுப்பொலிவுடன் களமிறங்குகிறது OnePlus 11 5G..! எப்போது தெரியுமா.?

OnePlus launched the OnePlus 11 5G smartphone at its device launch event along with a host of other exciting features.

OnePlus 11 5G - Marble Odyssey Colour

ஸ்மார்ட்போன் பிரியர்கள் அனைவராலும் அதிகம் விரும்பப்படும் ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் ஸ்மார்ட்போன், கேமரா மட்டுமல்லாமல் அனைத்து வித பயன்பாட்டிற்கும் அருமையாக இருக்கும். சமீபத்தில், ஒன்பிளஸ் நிறுவனம் அதன் சாதன வெளியீட்டு நிகழ்வில், பல அட்டகாசமான சாதனங்களுடன் ஒன்பிளஸ் 11 5G (OnePlus 11 5G) ஸ்மார்ட்போனை வெளியிட்டது.

unknown node

OnePlus 11 5G [Image source : Twitter/@valismind]

இந்த நிகழ்வில் ஒன்பிளஸ் 11 5G ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ஒரு புதிய மார்பில் ஒடிசி (Marble Odyssey Colour) நிறத்துடன் அறிமுகம் செய்யப்பட உள்ளது என நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த போன் ஏற்கனவே, டைட்டன் பிளாக் (Titan Black), எடேர்னல் க்ரீன் (Eternal Green) என இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. இவை இரண்டும் ரூ. 56,999-க்கு கிடைக்கிறது.

unknown node

OnePlus 11 5G [Image source : Twitter/@FoneArena Mobile]

தற்போழுது, புதிய கலரான மார்பில் ஒடிசி (Marble Odyssey Colour) கலர் இந்தியாவில்Amazon.inமற்றும்OnePlus.inஆகிய இணையதளத்தில் ஜூன் 6 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது என அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

unknown node

ஆனால், விலை குறித்த தகவல் இன்னும் அறிவிக்கவில்லை, இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் OnePlus 11 5G-ன் விலை ரூ. 64,999 ஆக இருக்கும் என்று  தகவல் கிடைத்துள்ளது.

unknown node

OnePlus 11 5G [Image source : Twitter/@FoneArena Mobile]

இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள்:

ஒன்பிளஸ் 11 5G ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் அளவுடைய குவாட்-எச்டி+ (Quad-HD+ Display) டிஸ்ப்ளே பயன்படுத்தப்பட்டுள்ளது.

பின்புற முக்கிய கேமரா 50 எம்பி கொண்ட சோனி IMX890 (Sony IMX890) சென்சாருடன் வருகிறது.

48 எம்பி கொண்ட அல்ட்ரா-வைட் கேமராவானது சோனி IMX581 (Sony IMX581) சென்சாருடன் வருகிறது.

32 எம்பி கொண்ட போர்ட்ரெய்ட் டெலி கேமராவானது சோனி IMX709 (Sony IMX709) சென்சாருடன் வருகிறது.

இதன் முன்புறத்தில் 16 மெகாபிக்சல் கொண்ட சோனி IMX471 (Sony IMX471) சென்சார் உடைய கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 11 5G ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 (Qualcomm Snapdragon 8 Gen 2 SoC) மூலம் இயக்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் 16 ஜிபி ரேம்+256 ஜிபி நினைவகத்துடன் வர உள்ளது.

இரண்டு நானோ சிம் ஆதரவுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 இல் ஆக்சிஜன்ஓஎஸ் 13 (OxygenOS 13) உடன் இயங்குகிறது.

ஒன்பிளஸ் 11 5G ஸ்மார்ட்போன் ஆனது 100W சூப்பர்வூக் (SuperVOOC) பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.