நேற்று வானில் சந்திரனும், வெள்ளியும் அருகருகே ஒன்றாக சந்திக்கும் அரிதான நிகழ்வு தெரிந்துள்ளது.
வானியல் இயற்பியலாளர்கள் மற்றும் பொதுமக்கள், சந்திரனுக்கு மிக அருகில் நெருங்கிவந்த, நமது சூரிய குடும்பத்தில் உள்ள பிரகாசமான வெள்ளி கிரகத்தைக் காணும் வாய்ப்பினை நேற்று பெற்றிருந்தனர். குறுகிய நேரத்துக்கு சந்திரனுக்கு அருகில் இருந்த வெள்ளி அதன் பின்னர் படிப்படியாக சந்திரனுக்குப் பின்னால் மறைந்து போனது.
இந்த அறிய நிகழ்வினை உலகின் பல பகுதிகளில் உள்ள மக்களும் பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். இந்த புகைப்படத்தை நாசா தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டுள்ளது. இது குறித்து கூறிய இந்தியாவின் வானியல் குழு, சந்திரன் மற்றும் வெள்ளி கிரகம் ஒன்றையொன்று அருகில் சந்திக்கும் அறிய நிகழ்வில் ஈடுபடுவார்கள் என்று தெரிவித்தது.<
unknown nodeunknown node