ரூ.49க்கு 25ஜிபி டேட்டா! ஐபிஎல் பக்கா அசத்தல் பிளானை கொண்டு வந்த ஜியோ!

JIO

JIO Recharge Plan: கிரிக்கெட் போட்டி பார்ப்பவர்களுக்காக ரூ.49க்கு 25ஜிபி டேட்டா வசதியுடன் ஜியோ அசத்தல் பிளானை கொண்டு வந்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி நடைபெற்றுக்கொண்டு இருக்கு நிலையில், ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் இலவசமாகவே ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இலவசமாக பார்த்து கொள்ளலாம் என்றாலும் கூட டேட்டா இருந்தால் தான் நம்மளால் பார்த்துக்கொள்ள முடியும். 5 ஜி நெட்வொர்க் இப்போது அன்லிமிடெட் இருந்தாலும் கூட 4ஜி நெட்வொர்க் பயன்படுத்தி வருபவர்கள் ஐபிஎல் போட்டிகள் பார்க்கும் போது தினசரி டேட்டா தீர்ந்துவிடும்.

அப்படி தீர்ந்த பிறகு பலரும் 19 ரூபாய்க்கு ஒரு முறை ரீசார்ஜ் செய்வார்கள் அதைப்போல அடுத்ததாக தீர்ந்துவிட்டால் மற்றோரு முறையும் 19 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்வார்கள். அப்படி 19க்குரீஜார்ஜ் செய்வதன் மூலம் ஒரு நாள் வேலிடிட்டி உடன் 1ஜிபி டேட்டா கிடைக்கும். ஆனால், அப்படி எல்லாம் தனி தனியாக ரீசார்ஜ் செய்யவே வேண்டாம்.

ஏனென்றால், ஐபிஎல் விரும்பி பார்பவர்களுக்காகவே அசத்தலான திட்டம் ஒன்றையும் வோடபோன் மற்றும் ஜியோ கொண்டு வந்து இருக்கிறது.  அது என்ன திட்டம் என்றால் ரூ.49 திட்டம் தான். இந்த திட்டம் ஒரே ஒரு நாள் வேலிடிட்டி உடன் மட்டுமே வருகிறது. அதாவது, ரீசார்ஜ் செய்த அதே நாளில் சரியாக இரவு 11:59 மணிக்கு இந்த திட்டம் முடிந்துவிடும். இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்வதன் மூலம் நீங்கள் மொத்தமாக 20 ஜிபி டேட்டாவை பெற்றுக்கொள்ளலாம்.

எனவே, தினமும் கிரிக்கெட் போட்டிகள் பார்ப்பவர்களுக்கு இந்த பிளான் கண்டிப்பாக நன்றாக இருக்கும். அதைப்போல ஜியோ ஜிம் வைத்து இருப்பவர்களுக்கு அதைவிட கூடுதலாக 5 ஜிபி டேட்டா கிடைக்கும். அதாவது, இதே ரூ.49 ரீசாஜ் திட்டத்தில் ரீசாஜ்  செய்தால் 25 ஜிபி டேட்டா கிடைக்கும். இது இதே ரீசாஜ்  திட்டத்தில் வோடபோனை விட 5 ஜிபி அதிகமான டேட்டா கிடைக்கிறது.

எனவே கிரிக்கெட் போட்டிகளை தொலைக்காட்சி மூலம் அல்லது போனில் அதிக அளவு தெளிவு திறனை வைத்து பார்ப்பவர்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ்  செய்தால் ஐபிஎல் போட்டியை ஜாலியாக பார்த்துக்கொள்ளலாம். தினம் தினம் 19 ரூபாய் ரீசார்ஜ் செய்து பார்ப்பவர்கள் அதனை தவிர்த்துவிட்டு இந்த 49 ரூபாய் திட்டத்தில் ரீஜார்ஜ் செய்து மகிழுங்கள்.

#image_title

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்