தினமும் 2.5 ஜிபி டேட்டா! புத்தாண்டை முன்னிட்டு ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் சலுகை!

2024 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஜியோ அமைதியாக தங்களுடைய புதிய சலுகையை அறிவித்துள்ளது. அது என்னவென்றால், வழக்கமாக வருடாந்திர ரீசார்ஜ் திட்டத்தில் ரூ. 2,999-க்கு கொடுத்து 365 நாட்கள் வேலிடிட்டியுடன் இருப்பதால் பலரும் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து வருகிறார்கள்.
அந்த ரீசார்ஜ் செய்பவர்களுக்காகவே ஜியோ அசத்தலான ஆபர் ஒன்றை கொண்டு வந்துள்ளது. அதன்படி, இந்த புத்தாண்டிலிருந்து இனிமேல் ஜியோவில் ரூ. 2,999-க்கு ரீசார்ஜ் செய்தால் வாடிக்கையாளர்கள் 389 நாட்களுக்கு திட்டத்தைப் பயன்படுத்த முடியும். அது மட்டுமின்றி இந்த திட்டத்தில் ஒரு நாளுக்கு 2.5 ஜிபி பயன்படுத்தும் திட்டத்தையும் ஜியோ அதிகரித்துள்ளது. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் 1 நாளைக்கு 100 எஸ்எம்எஸ்-ஐ பெறலாம்.
1,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பேடிஎம்! காரணம் இது தான்…
எனவே, வழக்கமாக இந்த வருடாந்திர ரீசார்ஜ் திட்டத்தை தொடர்ச்சியாக போட்டுகொண்டு வருபவர்களுக்கு இது கண்டிப்பாக நல்ல சலுகையாக அமைந்துள்ளது. மேலும், ஜியோவின் இந்த ரூ.2,999 வருடாந்திர திட்டமானது 4ஜியை பொறுத்தவரையில் ஒரு நாளைக்கு (2.5GB) அதிவேக டேட்டா மற்றும் அதன் பிறகு 64Kbps இல் டேட்டாவை வழங்குகிறது.
அதைப்போல, 5ஜி டேட்டாவை பொறுத்தவரையில் தற்போது அன்லிமிடெட் வழங்கப்பட்டுள்ள காரணத்தால் இந்த அன்லிமிடெட்5ஜி முடியும் வரை தினமும் அன்லிமிடெட் ஆக பயன்படுத்தி கொள்ளலாம். மேலும். ஜியோ அறிமுகம் செய்துள்ள இந்த அசத்தலான புத்தாண்டு சலுகை 2024 டிசம்பர் 20, 2023 அன்று அல்லது அதற்குப் பிறகு செல்லுபடியாகும். இன்னும் தெளிவான தேதியை ஜியோ அறிவிக்கவில்லை. விரைவில் அதற்கான அறிவிப்பையும் வெளியிடும் என கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
இந்தியால் அழிந்த இந்திய மொழிகள்., தமிழ் விழித்தது, பிழைத்தது! – மு.க.ஸ்டாலின் பதிவு!
February 27, 2025
விரைவில் அமலாகும் வக்பு வாரிய திருத்த மசோதா? மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
February 27, 2025