இஸ்ரோ SSLV-D2 ரக புதிய ராக்கெட்டை இன்று விண்ணில் செலுத்துகிறது.!

இஸ்ரோ இன்று எஸ்எஸ்எல்வி-இன் D-2 ரக புதிய ராக்கெட்டை ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் செலுத்துகிறது.

இஸ்ரோ இன்று எஸ்எஸ்எல்வி-இன் D-2 ரக புதிய ராக்கெட்டை ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் செலுத்துகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 9.18 மணிக்கு சிறிய செயற்கைக்கோள் ஏவுதல் வாகனத்தின் (எஸ்எஸ்எல்வி-டி2) D-2 ரக ராக்கெட்டை விண்ணில் செலுத்த உள்ளது.

இஸ்ரோவின் இஓஎஸ்-07, அமெரிக்காவைச் சேர்ந்த அந்தாரிஸின் ஜானஸ்-1 மற்றும் சென்னையைச் சேர்ந்த ஸ்டார்ட்டப் விண்வெளி ஆன ஸ்பேஸ்கிட்ஸின் ஆசாடிசாட்-2 ஆகிய மூன்று செயற்கைக்கோள்களை 450 கிமீ சுற்று வட்டப் பாதையில் விண்வெளிக்கு அனுப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இஸ்ரோவின் கூற்றுப்படி, SSLV ஆனது 500 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களை பூமியின் குறைந்த சுற்றுப்பாதையில் செலுத்துவதற்கும், குறைந்த செலவில் ராக்கெட்களை விண்வெளிக்கு அனுப்பும்  அணுகலை வழங்குகிறது, மேலும் செயற்கைகோள்களை குறைந்த நேரத்தில் திருப்புவதற்காக இது வழிவகை செய்வதாக இஸ்ரோ கூறியுள்ளது.

unknown node