இதுவரை இல்லாத மிகப்பெரிய டிஸ்ப்ளே... கூகுள் பிக்சல் ஃபோல்ட் 2 குறித்த சுவாரஸ்யங்கள்..

Google Pixel Fold 2 : ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாக காத்திருக்கும் கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஃபோல்ட் 2 மொபைல் ஸ்மார்ட்போன் வாசிகள் மத்தியில் பெரும்

Google Pixel Fold 2

Google Pixel Fold 2 : ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாக காத்திருக்கும் கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஃபோல்ட் 2 மொபைல் ஸ்மார்ட்போன் வாசிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. ஏனெனில், இது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போகளில் இதுவரை பார்க்காத மிகப்பெரிய டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என தெரிவிக்கின்றன.

Read More –புது புது அப்டேட்டுகளை அள்ளி வீசும் வாட்ஸ் அப்… விரைவில் வெளியாகும் புதிய அம்சம்!

பிக்சல் ஃபோல்ட் 2 6.29-இன்ச் அவுட்டர் டிஸ்ப்ளேவுடன் ஈர்க்கக்கூடிய 8.02-இன்ச் இன்னர் டிஸ்பிளேவைக் கொண்டிருக்கக்கூடும். இது தொழில்நுட்ப ஆர்வலர்களிடையே உற்சாகத்தைத் தூண்டியுள்ளது.   மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சந்தையில் கேம்-சேஞ்சராக Pixel Fold 2 இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

பிக்சல் ஃபோல்ட் 2-இல் உள்ள டிஸ்ப்ளேவில் ரியல் எஸ்டேட் கணிசமான அதிகரித்து இருப்பதால், இதற்கு முன்பு வந்த பிக்சல் ஃபோல் ஒன் மொபைலுடன் ஒப்பிடும்போது அதில் பல்வேறு மேம்படுத்தல்கள் செய்யப்பட்டுள்ளது. எனவே, பிக்சல் ஃபோல்ட் 2 டிஸ்ப்ளே குறித்து வெளியான வதந்திகள் உண்மையாக இருந்தால், அது பயனர்களுக்கு அதிவேக மற்றும் விரிவான ஒரு சிறந்த பார்வை அனுபவத்தை வழங்கும்.

Read More –இந்தியாவில் Vivo T3 5G எப்போது அறிமுகம்? எதிர்பார்க்கும் சிறப்பசங்கள்.. காத்திருக்கும் ரசிகர்கள்..

இது அதிநவீன தொழில்நுட்பத்தை விம்புபவர்களுக்கு கவர்ச்சிகரமான விருப்பமாக இருக்கும். ஆதாரங்களின்படி, பிக்சல் ஃபோல்ட் 2 இன் டிஸ்ப்ளேக்களின் உற்பத்தி ஏப்ரல் மாதம் தொடங்கும் என்றும் மே 14 ஆம் தேதி திட்டமிடப்பட்ட அதன் வருடாந்திரGoogle I/Oநிகழ்வில் Google Pixel Fold 2-ஐ வெளியிடலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மடிக்கக்கூடிய சாதனம் புதுப்பிக்கப்பட்ட பின்புற கேமரா வடிவமைப்பைக் கொண்டிருக்கும். பிக்சல் ஃபோல்ட் 2 புதிய டென்சர் ஜி4 சிப் மூலம் இயக்கப்படலாம். இதுபோன்று Pixel Fold 2 ஆனது பிக்சல் 8a மற்றும் ஆண்ட்ராய்டு 15 மென்பொருள் அப்டேட் மற்றும் பல்வேறு முக்கிய அம்சங்களுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More –இனி டெக்ஸ்ட் to வீடியோ… விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது Sora AI!

எனவே, பிக்சல் ஃபோல்ட் 2  அறிமுகம் மற்றும் அதன் முக்கிய அம்சங்கள், தொழில்நுட்பம் என பல்வேறு விவரங்கள் குறித்து தெரிந்துகொள்ள பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதனால் அனைவரது பார்வையும் Google Pixel Fold 2 மீதுதான் உள்ளது. அதுமட்டுமில்லாமல் Pixel Fold 2 இன் வெளியீடு, மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.

இதுவரை இல்லாத மிகப்பெரிய டிஸ்ப்ளே... கூகுள் பிக்சல் ஃபோல்ட் 2 குறித்த சுவாரஸ்யங்கள்..