ஹூவாய் நிறுவனத்தின் அசத்தும் ஸ்மார்ட் போன்..! 5ஜி+ மடித்து வைக்கும் வசதியும் உள்ளதாமே!

Huawei Mate X Foldable Phone Leaks Just Ahead. Read on- ஹூவாய் நிறுவனத்தின் அசத்தும் ஸ்மார்ட் போன்..! 5ஜி+ மடித்து வைக்கும் வசதியும் உள்ளதாமே!

பல்வேறு ஸ்மார்ட் போன்கள் மலை மலையாக வந்து குவிந்தாலும் அவற்றில் மிக சில மட்டுமே மக்களுக்கு பிடித்ததாக இருக்கும். பெரும்பாலும் அதிக ஸ்டோரேஜ், அதிக செயல்திறன், சிறப்பான ஸ்க்ரீன், சிறந்த வடிவமைப்பு போன்றவை இருந்தால் தான் அதனை மக்கள் விரும்புவார்கள்.

மிக முக்கியமாக அதன் விலையும் மலிவாக இருத்தல் வேண்டும். இப்படி எல்லா வசதிகளுடன் சிலபல புதுமைகளும் சேர்ந்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு அட்டகாசமான மொபைலை தான் ஹூவாய் நிறுவனம் தற்போது அறிமுகம் செய்ய உள்ளது.

unknown node

பெயர்?ஹூவாய் நிறுவனம் பலவித மாடல்களில் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்து வருகிறது. அதில் இந்த புதுவித ஸ்மார்ட் போனை எதிர்பார்த்து தான் தற்போது எல்லோரும் உள்ளனர். இதற்கு ஹூவாய் மேட் X (Mate X) என பெயரும் வைத்துள்ளனர்.

unknown node

சிறப்பம்சங்கள்இந்த மொபைல் 5ஜி நெட்வெர்க் வசதியுடன் சந்தைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அத்துடன் இதை மடிக்கணினி போன்றே நாம் மடித்து பயன்படுத்தி கொள்ளலாம். அப்போ இது எவ்வளவு மெல்லிய, அழகுடன் கூடிய வடிவத்தை கொண்டிருக்கும் என்பதை நீங்களே சிந்தித்து கொள்ளுங்கள் மக்களே.

unknown node

எப்போது?இந்த அட்டகாசமான ஹூவாய் மேட் X ஸ்மார்ட் போனை பார்சிலோனாவில் நடக்கவுள்ள 2019 மொபைல் வேர்ல்டு காங்கிரஸில் வெளியிட போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த ஸ்மார்ட் போனின் வருகையை பலரும் எதிர்பார்த்து உள்ளனர்.