கூகுள் நிறுவனம் 12,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
உலகின் பிரபலமான தேடுபொருள் நிறுவனமான கூகுள், ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது, அதன் அடிப்படையில் கூகுளின் 12,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்து அவர்களுக்கு நாங்கள் தனியாக மின்னஞ்சல் அனுப்பியுள்ளோம் என அந்நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
இது குறித்து கூறிய சுந்தர் பிச்சை, வேலைகளை குறைக்கும் முடிவுக்கு மன்னிப்பு கேட்டு முழு பொறுப்பையும் தான் ஏற்பதாகக் கூறினார். அவர் அனுப்பிய மின்னஞ்சலில், நம்பமுடியாத திறமை வாய்ந்த சிலரை பணிநீக்கம் செய்வது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன்.
செயற்கை நுண்ணறிவு (AI) இல் எங்களின் ஆரம்ப முதலீடுகள் ஆகியவற்றின் காரணமாக, நிறுவனத்தின் முன்னேற்றம் சீரமைக்கப்படுவது குறித்து சில கடினமான முடிவுகளை எடுத்தாக வேண்டும். உங்கள் பங்களிப்புகள் விலைமதிப்பற்றவை, மேலும் உங்களது கடின உழைப்பிற்கு நன்றி. வெளியேறவுள்ள பணியாளர்களுக்கு சட்டப்படி தேவையான அனைத்து உதவிகளையும் கூகுள் வழங்கும் என்று அவர் கூறியுள்ளார்.