வருகிறது ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் ஐ பேடு …!!! வசதிகளை அறிந்து கொள்ள வேண்டுமா?…!!!

Default Image
ஸ்மார்ட் போன்களின் முடிசூசாடா  அரசனான  ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் ஐபேட் மினி 5 மற்றும் புதிய என்ட்ரி-லெவல் ஐபேட் மாடல் ஒன்றை அறிமுகம் செய்யலாம் என தகவல்கள் தற்போது   வெளியாகியுள்ளது.ஐபேட் மினி 4 மாடலின் மேம்படுத்தப்பட்ட டேப்லெட் சாதனம் வரும் என  நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படுகிறது.
Related image
முன்னதாக ஐபேட் மினி 4 செப்டம்பர் 2015 இல் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டது.இந்நிலையில்  மேம்படுத்தப்பட்ட ஐபேட் மினி டேப்லெட் மட்டுமின்றி ஆப்பிள் நிறுவனம் என்ட்ரி-லெவல் ஐபேட் மாடல் ஒன்றையும் இந்த ஆண்டு அறிமுகம் செய்ய உள்ளதென கூறப்படுகிறது.இந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் இரண்டு என்ட்ரி-லெவல் ஐபேட் மாடல்களை இந்த ஆண்டு அறிமுகம் செய்ய உள்ளது. இவற்றில் ஐபேட் மினி 5 மற்றும் என்ட்ரி-லெவல் ஐபேட் உள்ளிட்டவை இந்த ஆண்டின் முதல் அரையாண்டிற்குள் அறிமுகமாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Image result for APPLE IPAD MINI 5
இந்த புதிய ஐபேட் மாடல்களின் சிறப்பம்சங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், ஏற்கனவே வெளியான தகவல்களில் ஐபேட் மினி 5 மாடலில் செங்குத்தாக பொருத்தப்பட்ட டூயல் பிரைமரி கேமரா செட்டப் மற்றும் ஹெட்போன் ஜாக் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
Image result for APPLE IPAD MINI 5
இந்நிலையில் பிரபல ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியோ கடந்த ஆண்டு வெளியிட்ட தகவல்களில் புதிய ஐபேட் மினி 5 டேப்லெட் 2019 கோடை காலத்தில் அறிமுகமாகலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த டேப்லெட்டில் முந்தைய ஐபேட் மினி மாடலை விட மேம்பட்ட பிராசஸர் மற்றும் சற்றே குறைந்த விலையிலான டிஸ்ப்ளே பேனல் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.இதனால் ஆப்பிள் பயனாளர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
DINASUVADU.
.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்