உங்கள் ஸ்மார்ட் போனில் அவசியம் மாற்ற வேண்டிய 5 செட்டிங்ஸ்கள் இதோ..!

Here we listed 5 Android Settings You Must Change Right Now. Take a look - உங்கள் ஸ்மார்ட் போனில் அவசியம் மாற்ற வேண்டிய 5 செட்டிங்ஸ்கள் இதோ..!

பலருக்கும் தன்மை விட தனது ஸ்மார்ட் போன் மீது அதீத அன்பும் அக்கறையும் இருக்கும். ஸ்மார்ட் போனை நாம் எந்த அளவுக்கு பார்த்து கொள்கிறோமோ அந்த அளவிற்கு தான் அதன் செயல்பாடும், திறனும் கூடும்.

ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் பலருக்கும் அதில் உள்ள சில முக்கியமான செட்டிங்ஸ்கள் பற்றி தெரிவதில்லை. இந்த தொகுப்பில் நாம் அவசியம் இப்போதே மாற்ற கூடிய 5 செட்டிங்ஸ் பற்றி பார்க்க போகிறோம்.

unknown node

பிளேஸ்டார்அன்றாடம் பல ஆயிர கணக்கான ஆப்ஸ்கள் வெளி வருகின்றன. இந்த ஆப்ஸ்களில் பல, நம் மொபைலை முழுவதுமாக சேதம் செய்கின்றன. இது போன்ற மோசமான ஆஃப்ஸ்களில் இருந்து உங்கள் ஸ்மார்ட் போனை காக்க இதனை செய்யுங்கள்.

பிளேஸ்டோரை க்ளிக் செய்தவுடன் அதில் 3 கோடுகள் இருக்கும். அதை க்ளிக் செய்துplay protectஎன்கிற ஆப்ஷனை தேர்வு செய்யவும். அடுத்து அதில்improve harmful app protectionஎன்பதை டிக் செய்ய வேண்டும். பிறகுmy apps & gamesஎன்பதைrefreshசெய்யவும். இதில்no problems foundஎன்று வந்தால் அந்த ஆஃப்சை நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம்.

unknown node

பிரைவசிஉங்களின் அந்தரங்க விஷயத்தை மற்றவர்கள் பார்க்க கூடாது என விருப்பினால் இந்த செட்டிங்ஸை மாற்றவும். அதற்கு செட்டிங்ஸ் உள் நுழைந்துnotificationஆப்ஷனை க்ளிக் செய்த பின்,when device is lockedஎன்பதை க்ளிக் செய்யவும். இதில் 3 ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். இவற்றில்hide sensitive notificationஎன்பதை டிக் செய்யவும். இது உங்களின் போன் கால்ஸ்,மெசேஜ் மற்றும் இதர செய்திகளையும் பிறரிடம் இருந்து மறைத்து விடும்.

unknown node

எண்கள்உங்களின் மொபைல் கீபோர்டில் எண்களை டைப் செய்ய கடினமாக இருந்தால் அதற்கும் எளிய வழி உண்டு. அதாவது, செட்டிங்ஸ் உள் நுழைந்து அதில் ஜிபோர்டு ஆப்சனை க்ளிக் செய்து பின்,preferenceஎன்பதை க்ளிக் செய்யவும். அடுத்துnumber rowஎன்பதை டிக் செய்தால் உங்களின் கீபோர்ட்டில் எண்களுக்கான வரிசை சேர்க்கப்பட்டிருக்கும். இதனை சுலபமாக பயன்படுத்தலாம்.

unknown node

முக்கியம்உங்கள் மொபைலை தவறுதலாக எங்கேயாவது விட்டு சென்றாலோ, அல்லது உங்களுக்கு ஏதேனும் விபத்து நேர்ந்தாலோ அதை உங்கள் உறவினர்களுக்கு தெரியப்படுத்த இந்த செட்டிங்ஸை மாற்றவும். அதாவது, செட்டிங்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்து, அதில்securityஎன்கிற ஆப்ஷனை தேர்வு செய்த பின்lock screen messageஎன்பதை க்ளிக் செய்து அதில் உங்களின் பெற்றோர்களின் போன் நம்பரை பதிவு செய்யவும். இது மிக உதவியாக இருக்கும்.

unknown node

தேடு பொறி கீழே வரஉங்களது மொபைலில் தேடி பொறி ஆப்ஷன் இருக்கும். இதனை கீழே கொண்டு வரchrome://flagsஎன்பதை கூகுளில் டைப் செய்து உள்ளே நுழையவும். இதில் chrome home என்பதை தேர்வு செய்த பின் enable ஆப்ஷனை க்ளிக் செய்யவும். கடைசியில் launch now என்பதை க்ளிக் செய்தால் உங்களின் தேடு பொறி கீழ் பகுதியில் வந்து விடும்.