வாட்ஸ்அப் தனது புதிய அப்டேட்டில் குரல் பதிவை ஸ்டேட்டஸ் ஆக வைக்கும் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகில் பல மில்லியன் பயனர்கள் பயன்படுத்தும் செய்தி தளமான மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப், அவ்வப்போது தங்களது செயலியில் பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி பயனர்களை குதூகலப்படுத்துவது வழக்கம். அதேபோல் இந்தமுறை வாட்ஸ்அப் கொண்டு வந்துள்ள புதிய அப்டேட்டில், பயனர்கள் தங்களது குரல் பதிவை 30 வினாடிகள் வைக்கும் ஸ்டேட்டஸில் வைத்துக்கொள்ளலாம்.
இந்த தகவலை வாட்ஸ்அப் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ஸ்டேட்டஸ் அம்சத்தில் சில அற்புதமான புதுப்பிப்புகளைச் சேர்த்துள்ளோம். அது எப்படி இருக்கிறது, என்று சொல்லுங்கள். இப்போது நீங்கள் சிரமமின்றி உங்கள் குரல்களை பதிவு செய்து ஸ்டேட்டஸில் பகிரலாம் என்று வாட்ஸ்அப் ட்வீட் செய்துள்ளது.
மேலும் ஸ்டேட்டஸ் வைத்துள்ள பயனரின் சுயவிவர புகைப்படத்தை சுற்றி வளையம் தோன்றும். நீங்கள் விரைவாக ஸ்டேட்டஸை பார்ப்பதற்கு, சாட்டில் அந்த நபரின் சுயவிவர புகைப்படத்தை கிளிக் செய்து பார்த்துக்கொள்ளலாம் என்றும், ஆண்ட்ராய்டுகளுக்கு பச்சை நிறத்திலும் ஐஓஎஸ் (iOS) களுக்கு நீல நிறத்திலும் அந்த வளையம் தோன்றும் என்றும் வாட்ஸ்அப் கூறியது.
unknown node