1,300 ஊழியர்கள் பணிநீக்கம்; ஜூம் அதிரடி முடிவு.!

ஜூம்(Zoom) நிறுவனம் அதன் 1,300 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

ஜூம்(Zoom) நிறுவனம் அதன் 1,300 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

ஜூம் வீடியோ கம்யூனிகேஷன் இன்க். நிறுவனம் அதன் 15% ஊழியர்களை அதாவது 1300 பேரை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. அதன் வீடியோ கான்பரன்சிங் சேவைகளுக்கான தேவை மிகவும் மந்தமாக இருப்பதால் இந்த முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்தது, மேலும் நிர்வாக ஊதியத்தையும் குறைக்க உள்ளதாக திட்டமிட்டுள்ளது.

பல தொழில்நுட்ப நிறுவனங்கள் 2022 இல் வேலைகளை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, அதிக பணியமர்த்தல், உலகளாவிய பொருளாதார நிலைமைகள் காரணமாக, 2023 ஆம் ஆண்டிலும் இந்த நிறுவனங்கள்  பெருமளவிலான பணிநீக்கங்களை தொடர்ந்து வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக ஜூம் நிறுவனம், வணிக நிறுவனம் மற்றும் தனிநபர்களுக்கான முக்கியமான தேவையாகவும், உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பிராண்டாகவும் மாறியுள்ளது. நீங்கள் ஆரம்பத்தில் இருந்தே ஜூமில் இருந்திருந்தாலும் அல்லது சமீபத்தில் எங்களுடன் சேர்ந்திருந்தாலும், இதில் முக்கியப் பங்கு வகித்துள்ளீர்கள். மேலும் எங்கள் குழுவிலிருந்து சுமார் 1,300 திறமையான சக ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கும் கடினமான முடிவை நாங்கள் எடுத்துள்ளோம், என்று தலைமை நிர்வாக அதிகாரி எரிக் யுவான் கூறினார்.

நிறுவனம் கோவிட்-19 தொற்றுநோய்களின் போது தேவை அதிகரிப்பின் காரணமாக பல ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியது, ஆனால் தற்போது தொற்றுநோய்க்குப் பிந்தைய உலகில் வீடியோ சேவைகளுக்கான தேவை குறைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்தது. தலைமை நிர்வாக அதிகாரி எரிக் யுவான், பணிநீக்கங்களை அறிவிக்கும் போது, வரும் நிதியாண்டில் எனது சம்பளத்தை 98% குறைக்கிறேன், தனது போனஸை கைவிடுவதாகவும் கூறினார்.