பிரபல வயலின் இசைக்கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் நினைவு நாள் வரலாற்றில் இன்று. 1935 ஆம் ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் குன்னக்குடியில் பிறந்தவர் தான் பிரபல வயலின் இசைக் கலைஞர் வைத்தியநாதன். இவரது சகோதர, சகோதரிகள் அனைவருமே இசைக் கலைஞராக தான் இருந்துள்ளனர். இவர் தனது பன்னிரண்டாவது வயதில் வயலின் கற்றுக் கொண்டுள்ளார். அப்போது முதலே தந்தைக்குப் பெருமை சேர்க்கும் விதமாக பல இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். அதன் பின் 1976 ஆம் […]
அமமுக வேட்பாளர் வைத்தியநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை பலரும் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், அரசியல் பிரபலங்கள் பலர் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரம் விளக்கு தொகுதி மாமுக வேட்பாளர் வைத்யநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இவர் கிண்டி கிங் இன்ஸ்டிட்யூட்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பதிவுத்துறையில் பெரும்பாலான வேலை மேஜைக்கு கீழ் தான் நடைபெறுகிறது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில், கரூரை சேர்ந்த செந்தில் என்பவர், மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தனது நிலத்தின் சர்வே எண்ணில் உள்ள தவறை சரி செய்ய மண்மங்கலம் வட்டாட்சியருக்கு உத்தரவிடுமாறு கோரியிருந்தார். இதனை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், வட்டாட்சியரின் கடிதத்தின் மீது 2 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காத, தாந்தோணிமலை வட்டார வளர்ச்சி அலுவலர் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இந்நிலையில்,இதுகுறித்து கூறிய நீதிபதி, […]