பிரபல வயலின் இசைக்கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் நினைவு நாள் இன்று…!

Default Image

பிரபல வயலின் இசைக்கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் நினைவு நாள் வரலாற்றில் இன்று.

1935 ஆம் ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் குன்னக்குடியில் பிறந்தவர் தான் பிரபல வயலின் இசைக் கலைஞர் வைத்தியநாதன். இவரது சகோதர, சகோதரிகள் அனைவருமே இசைக் கலைஞராக தான் இருந்துள்ளனர். இவர் தனது பன்னிரண்டாவது வயதில் வயலின் கற்றுக் கொண்டுள்ளார். அப்போது முதலே தந்தைக்குப் பெருமை சேர்க்கும் விதமாக பல இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

அதன் பின் 1976 ஆம் ஆண்டு முதல் முறையாக வயலின் இசையைக் கொண்டு கச்சேரி நடத்தி உள்ளார். 1969 ஆம் ஆண்டு வா ராஜா வா என்ற தமிழ் திரைப்படத்தில் முதன் முதலாக இசையமைத்தார். இவரது இசை திறமைக்காக இசைப்பேரறிஞர், சங்கீத நாடக அகாடமி, சங்கீத கலாசிகாமணி, கலைமாமணி, பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இவர் வயலின் சக்கரவர்த்தி என்றும் அழைக்கப்பட்டு உள்ளார். வயலின் இசை மூலமாக பல லட்சக்கணக்கான மக்களின் உள்ளங்களை கவர்ந்த குன்னக்குடி வைத்தியநாதன் தனது 73-வது வயதில் 2002 ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் தேதி உயிரிழந்தார். இவரது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்