சென்னை: இதுவரை இல்லாத வகையில் ஹெல்மெட் அணியாமல் கார் ஓட்டிய நபருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்ட சம்பவமானது உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரைச் சேர்ந்த பகதூர் சிங் பரிஹார் என்பவர் ஒரு டிரக்கர்ஸ் யூனியனின் தலைவராக உள்ளார். இவர் ஹெல்மெட்டுடன் கார் ஓட்டிச் செல்லும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அது ஏன் என்று பார்க்கையில், இவர் ஹெல்மெட் அணியாமல் ஆடி காரை ஓட்டியதால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது […]
சிறிய எழுத்து பிழை காரணமாக உத்தரபிரதேச பிரயாகராஜில் ஒரு நபர் ஜாமீன் பெற்ற போதிலும் கூடுதலாக எட்டு மாதங்கள் சிறையில் இருந்துள்ளார். ஜாமீன் உத்தரவில் அவரது நடுப்பெயர் இல்லாததால் ஒரு குற்றவாளி மேலும் எட்டு மாதங்கள் சிறையில் வைக்கப்பட்டார். ஜாமீன் உத்தரவு (கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது) குற்றம் சாட்டப்பட்டவரின் உண்மையான பெயர் ‘வினோத் குமார் பருவார்’ ஆனால், ஜாமீன் உத்தரவில் ‘வினோத் பருவார்’ என்று குறிப்பிட்டுள்ளதால், சிறை கண்காணிப்பாளர் விடுவிக்க மறுத்துவிட்டார். குற்றம் சாட்டப்பட்ட வினோத் தாக்கல் […]