உ.பி.யில் வினோதம்: ஹெல்மெட் இல்லாமல் ஆடி கார் ஓட்டிய நபருக்கு ரூ.1000 அபராதம்!
சென்னை: இதுவரை இல்லாத வகையில் ஹெல்மெட் அணியாமல் கார் ஓட்டிய நபருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்ட சம்பவமானது உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரைச் சேர்ந்த பகதூர் சிங் பரிஹார் என்பவர் ஒரு டிரக்கர்ஸ் யூனியனின் தலைவராக உள்ளார். இவர் ஹெல்மெட்டுடன் கார் ஓட்டிச் செல்லும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அது ஏன் என்று பார்க்கையில், இவர் ஹெல்மெட் அணியாமல் ஆடி காரை ஓட்டியதால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது தெரிய வந்தது.
ஆனால் அவர் இருசக்கர வாகனத்தை ஓட்டவில்லை என்றும், தனது ஆடி காரை ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. பின் ஏன் இந்த அபராதம் என்று பார்க்கும்பொழுது, பகதூர் சிங்கிற்கு வந்த குறுஞ்செய்தியின் படி, ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டிச் சென்றபோது பிடிபட்டதாகவும், ஆனால் அவர் தனது காரை ஓட்டிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆம், சலானில் உள்ள புகைப்படம் இருசக்கர வாகனமாக இருந்தாலும், வாகனத்தின் கேட்டகிரியில் ‘மோட்டார் கார்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தவறாக அபராதம் விதிக்கப்பட்டது தொடர்பாக, அந்த நபர் போக்குவரத்து போலீசாரை அணுகி, தவறு குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தபோது, மக்களவைத் தேர்தல் முடியும் வரை காத்திருக்குமாறு கூறப்பட்டது.
இதனால், அவர் மீண்டும் ஒரு அபராதம் விதித்தால் என்ன செய்வது என்று அபராதத்தை தவிர்க்க ஹெல்மெட் அணிந்து கொண்டு கார் ஒட்டுகிறாராம்.
After being fined ₹1,000 for not wearing helmet in his car, a UP man now drives Audi wearing
Why did the man start wearing helmet in car?#Jhansi #TrafficFines #AudiDriver #HelmetInCar #ViralStory #UnusualFine #DrivingSafety #TrafficPolice #IndiaNews #RoadSafety #HelmetStory pic.twitter.com/Y2u2z3SNXH
— The Source Insight (@DSourceInsight) May 17, 2024