தலைமை செயலர் சண்முகம் அவர்களின் பதவிக்காலத்தை 3 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது மத்திய அரசு. தமிழகத்தின் தலைமை செயலராக தற்போது சண்முகம் பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் அடுத்த மதம் நிறைவடைய உள்ளது. தற்போது, இவரது பதவிகாலத்தை நீடிக்க கோரி தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தலைமை செயலர் சண்முகத்தின் பதவிக்காலத்தை ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையில் 3 மாதங்களுக்கு அவரது பதவிக்காலத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
முதல்வர், துணை முதல்வர் இல்லங்கள் மற்றும் தலைமை செயலகம் ஆகிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. நேற்று முதல் இன்று காலை வரை மேற்கூறிய இடங்களில் வெடிகுண்டு சோதனை தீவிரமாக நடைபெற்றது. சென்னை காவல் கட்டுப்பட்டு அறைக்கு நேற்று ஒரு நபரிடம் இருந்து போன் அழைப்பு வந்துள்ளது. அந்த நபர், தமிழக முதல்வர் இல்லம், துணை முதல்வர் இல்லம், தலைமை செயலகம் ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறியதாக தெரிகிறது. அதனை தொடர்ந்து நேற்று மாலை முதல் […]