தமிழ்நாடு தலைமை செயலகத்தில் தீவிர வெடிகுண்டு சோதனை!

- முதல்வர், துணை முதல்வர் இல்லங்கள் மற்றும் தலைமை செயலகம் ஆகிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
- நேற்று முதல் இன்று காலை வரை மேற்கூறிய இடங்களில் வெடிகுண்டு சோதனை தீவிரமாக நடைபெற்றது.
சென்னை காவல் கட்டுப்பட்டு அறைக்கு நேற்று ஒரு நபரிடம் இருந்து போன் அழைப்பு வந்துள்ளது. அந்த நபர், தமிழக முதல்வர் இல்லம், துணை முதல்வர் இல்லம், தலைமை செயலகம் ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறியதாக தெரிகிறது.
அதனை தொடர்ந்து நேற்று மாலை முதல் முதல்வர் இல்லம், துணை முதல்வர் இல்லம், தலைமை செயலகம் என அனைத்து இடங்களிலும் வெடிகுண்டு நிபுணர்கள் குழு தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இச்சோதனை இன்று காலை வரை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இச்சோதனையில் எந்தவித வெடிகுண்டும் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. அந்த அழைப்பு போலி எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025