சென்னை : சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை செல்லும் 28 மின்சார ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று(22.11.2024) தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு, திருமால்பூர், காஞ்சிபுரம், அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்களின் நேர அட்டவணையில் மாற்றம் செய்துள்ளதாக தென்னக ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், பயணிகள் நலன் கருதி, மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பாக, வழக்கம்போல் பிராட்வே இருந்து தாம்பரம் வழியாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 10 பேருந்துகளை […]
சென்னை – திருவள்ளூர் க்கு இடையேயான புறநகர் ரயில்சேவை தண்டவாளத்தில் தேங்கியுள்ள மழைநீர் காரணமாக மின்சார ரயில்சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஆவடி மற்றும் அம்பத்தூரில் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால், எம்ஏஎஸ்-ல் இருந்து திருவள்ளூர் செல்லும் பெரும்பாலான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. திருவொற்றியூர் – கொருக்குப்பேட்டை இடையே கனமழை பெய்து வருவதால் வடக்கு பகுதியில் கும்மிடிப்பூண்டி நோக்கி செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு நோக்கிய அனைத்து சேவைகளும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும். நாங்கள் […]