28 மின்சார ரயில்கள் ரத்து.. கூடுதல் பேருந்துகளை அறிவித்த போக்குவரத்துக் கழகம்!
28 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், கூடுதல் பேருந்துகளை இயக்கப்படும் என அறிவிக்கப்ட்டுள்ளது.
சென்னை : சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை செல்லும் 28 மின்சார ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று(22.11.2024) தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு, திருமால்பூர், காஞ்சிபுரம், அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்களின் நேர அட்டவணையில் மாற்றம் செய்துள்ளதாக தென்னக ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், பயணிகள் நலன் கருதி, மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பாக, வழக்கம்போல் பிராட்வே இருந்து தாம்பரம் வழியாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 10 பேருந்துகளை பிராட்வே முதல் தாம்பரத்திற்கு இயக்கப்படுகிறது.
மேலும், தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 10 பேருந்துகளை தாம்பரம் முதல் செங்கல்பட்டுக்கும் ஆக மொத்தம் கூடுதலாக 20 பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகளின் எண்ணிக்கை இவ்வழித்தடங்களில் அதிகரிப்பதை பொறுத்து கூடுதல் பேருந்துகளை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு, திருமால்பூர், காஞ்சிபுரம், அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்களின் நேர அட்டவணையில் மாற்றம் செய்துள்ளதாக தென்னக ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பயணிகள் நலன் கருதி, மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பாக, பிராட்வேயில் இருந்து தாம்பரம்… pic.twitter.com/Meqvdhu7hZ
— MTC Chennai (@MtcChennai) November 22, 2024